அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் குடிசை வீட்டில் படித்து கோவை மாணவி முதன்முதலாக மருத்துவகல்லூரி செல்கின்றார்.
கோவை மாவட்டம் வாளையார் அருகே நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடி மாணவி சங்கவி. 2018 ம் ஆண்டு 12 ம் வகுப்பை முடித்த அவர் மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்வு முடிவுகளில் பழங்குடி மாணவி சங்கவி 202 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நஞ்சப்பனூர் பழங்குடி கிராமத்தில் மருத்துவகல்லூரிக்கு செல்லும் முதல் மலசர் பழங்குடி மாணவி சங்கவி. அடிப்படை வசதிகள் இல்லாத அந்த பழங்குடி கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவியான சங்கவி, உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்த நிலையில் , ஊடகங்களில் செய்தியாக வந்த பின்னர் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைத்தது.
மருத்துவகல்வி படிக்க அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் மாணவி சங்கவி கேட்டுக்கொண்டுள்ளார். மாணவியின் தந்தை உயிரிழந்து விட்ட நிலையில் , கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவி சங்கவி படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு