• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு

October 28, 2021 தண்டோரா குழு

தீபாவளி திருநாளினை முன்னிட்டு ஈஷா சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற யோகா வகுப்பு ஆன்லைன் வாயிலாக நவம்பர் 12-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை தமிழக மக்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது.

காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை என 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வது அவசியம். *isha.co/uno-pb* என்ற இணைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம். முன்பதிவு நவம்பர் 5-ம் தேதி இரவு 9 மணியுடன் நிறைவு பெறுகிறது.

மேலும் படிக்க