• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது கோவை முழுமைத் திட்டம் மூலம்

October 23, 2021 தண்டோரா குழு

கோவை முழுமைத் திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார் மக்வானா தலைமையில் கோவை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் தெரிவித்ததாவது,

‘‘கோவையில் சுமார் 1500 சதுர கீலோ மீட்டருக்கு குறையாத சுற்றளவிற்கு கோவை முழுமைத் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. புதியதாக சுற்றுச் சாலை அமைத்து அதனருகிலேயே தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவை மாவட்டம் தொழில் நிறுவனங்கள் மிகுந்த மாவட்டமாகும். எனவே, மேலும், கூடுதலான தொழில் வளர்ச்சியை மேம்பாடு அடைந்த நகரமாக இத்திட்டம் முழுமையாக பயன்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம், சாலைகள் ஆகியவற்றில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு நல்ல கருத்துக்களை கூறிய சமூக ஆர்வலர்கள், வல்லூநர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவரதுவ்கருத்துக்களும் பரிசீலிக்கப்படும்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், நகர ஊரமைப்பு இயக்குநர் சரவணவேல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, நகர ஊரமைப்பு இணை இயக்குநர் வாழவந்தான், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க