தமிழகத்தில் முதல் முறையாக
பிறந்து 40 நாள் ஆன குழந்தைக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆட்சியர் வழங்கினார்.
அரசால் தத்தெடுக்கப்பட்ட பிறந்த 40 நாட்களே ஆன குழந்தைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான அடையாள அட்டையினை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோவை மாவட்ட சரணாலயம் தத்து வழங்கும் மையத்திற்கு 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை அவர்களது பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு யாரும் இல்லை மற்றும் மருத்துவர் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் அக்குழந்தையை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் முதல் முறையாக 40 நாள் ஆன குழந்தைக்கு ஒரு தனியாக மருத்துவ காப்பீடு அட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் கிஷோர்குமார், மற்றும் மாவட்ட அலுவலர் கருண மஹாராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு