• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்டிஎப்சி மீச்சுவல் பண்ட் புதிய நிதி வெளியீடு !

October 21, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் சொத்து மேலாண்மையில் முன்னணி வகித்து வரும் எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம், 4.35 டிரில்லியன் ருபாய் அளவிற்கு செத்து மதிப்புகளை நிர்வகித்து வருகிறது. தற்போது புதிய, “எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட்” ஐ வெளியிட்டுள்ளது. நிப்டி நெக்ஸ்ட் குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமான நிதியாக இருக்கும்.

எச்டிஎப்சி ஏஎம்சி நிறுவனம், நிலையான நிதி மேலாண்மையில் 19 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தது. குறியீட்டு நிதி பிரிவில் முன்னணியில் உள்ள நிதி மேலாளர்கள், மேலாண்மை செய்து வருகின்றனர். இந்த அனுபவம், இன்டெக்ஸ் பண்ட் மேலாண்மையில் சிறப்பான ஒரு நிர்ணயத்தை உருவாக்கியுள்ளது. எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு துறைகளில்ஃ பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தை கொண்டது. இந்த நிதி, நெக்ஸ்ட் நிப்டி 50 ல் உள்ள தனித்துவமிக்க பல்வேறு வணிகங்களைக் கொண்டது, நிப்டி 50ல் உள்ள வணிகத்தை காட்டிலும் மாறுபட்டது.

எச்டிஎப்சி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண், ஒரு திறவு நிலை முடிவு கொண்ட திட்டத்தை உடையது. நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டினை அடிப்படையாகவும், பிரதிபலிப்பதாகவும் இருக்கும். இப்புதிய நிதி வெளியீடு அக்டோபர் 22, 2021 ல் துவங்கி அக்டோபர் 29, 2021 ல் நிறைவு பெறுகிறது.

எச்டிஎப்சி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட் பற்றி, எச்டிஎப்சி ஏஎம்சி முதுநிலை நிதி மேலாளர் கிருஷண் குமார் தாகா பேசுகையில், “எச்டிஎபசி நிப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் பண்ட், துறை ரீதியாகவும், பங்கு அளவிலும் பல்நோக்கு முதலீட்டு திட்டத்தை கொண்டது. நிப்டி 50 குறியீட்டினை காட்டிலும், ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரத்தில் சாதகமான அம்சத்தை கொண்டது. கடந்த 2021 செப்டம்பர் 30 நிலவரப்படி, நிப்டி 50 ஐ காட்டிலும், அதிக வளர்ச்சியை நெக்ஸ்ட் நிப்டி 50 கொண்டுள்ளது. இந்த நிதியில் முதலீடு செய்வோர், எதிர்கால நிப்டி 50 நிறுவனங்களின் பயனீட்டு வாய்ப்பை பெறுவர்,” என்றார்.

எச்டிஎப்சி ஏஎம்சி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் முனாட் பேசுகையில்,

” இந்த நிதி வெளியீடானது, எங்களது பாசிவ் வகை முதலீட்டு விரிவாக்கத்தல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய நிதி நிர்வகிப்பதில் எச்டிஎப்சி ஏஎம்சி , அனுபவமும், நிருபிக்கப்பட்ட செயல் திறனையும் பெற்றுள்ளது என்றார்.

மேலும் படிக்க