October 18, 2021
தண்டோரா குழு
கோவையில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர்(41). கூலி தொழிலாளி. இவரது மகள் ஹரிணி(16). ராம்நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சுதாகர் தனது மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க புதிய ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார். ஆனால் ஹரிணி படிப்பில் கவனம் செலுத்தாமல் நீண்ட நேரம் செல்போன் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த சுதாகர் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஹரிணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.