• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

APJ அப்துல்கலாமின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சிறுவர், சிறுமியர்

October 15, 2021 தண்டோரா குழு

டாக்டர் APJ அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பொதுமக்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் ரங்கநாதன், செயலாளர் முனுசாமி,பொருளாளர் நிர்மல்,கவுர ஆலோசகர் மணிவண்ணன், கலைமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் அப்துல்கலாமின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சிறுவர், சிறுமியர் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து நிறுவனத் தலைவர் ரங்கநாதன் கூறுகையில்,

அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை கடந்த 3ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும்,அறக்கட்டளையின் மூலம் மரம் நடுதல், வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்கான உதவிகளை வழங்குதல், கொரோனா காலகட்டத்தின் போது ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், வசதியற்ற ஊருக்கு இறுதி சடங்குகளை செய்ய உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.

மேலும் படிக்க