• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் பொதுமக்கள், கால்நடைகளை தாக்கி வந்த T-23 புலி பிடிபட்டது !

October 15, 2021 தண்டோரா குழு

நீலகிரி, மசினகுடி வனப்பகுதியில், தேடப்பட்டு வந்த T-23 புலி பிடிபட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வந்தது. , டி 23 புலியால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர்.

முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர் மண்டி காணப்படும் சரணாலயம் என்பதாலும், அதிகளவிலான புலிகள் அப்பகுதியில் இருப்பதாலும் டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் ஏற்பட்டன.

கிட்டத்தட்ட 20 நாட்களாக சிக்காமல் இருந்த புலியை நேற்று லிங்கனகள்ளியில் இருந்து போஸ்பாரா செல்லும் வழியில் வனத்துறையினர் கண்டனர்.அங்கு புதரில் இருந்து துப்பாக்கியில் மயக்க ஊசியை பொருத்தி புலி மீது சுட்டனர்.ஆனால் புலி புதருக்குள் மறைந்து தப்பியோடியதால், அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், மீண்டும் தப்பிய டி 23 புலியை பிடிக்கும் பணியில் இன்று 21ஆவது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் டி-23 புலி பிடிபட்டுள்ளது, மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க