• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 13, 2021 தண்டோரா குழு

கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

இது குறித்து லோட்டஸ் கண் மருத்துவமனையின் துணைத் தலைவர், தமிழ்ச்செல்வன் கூறும்போது :-

உலக கண் பார்வை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக கண் பார்வை தினம் வருகின்ற அக்டோபர் 14ஆம் நாள், 2021 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை தினமானது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண் பார்வை மற்றும் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.கண் பார்வை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சிட்டி இணைந்து ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை லோட்டஸ் கண் மருத்துவமனையின் Optometry பயிலும் சுமார் 100 மாணவர்கள் மூலம் இன்று (புதன்கிழமை அக்டோபர் 13) காலை 8:30 மணிக்கு லோட்டஸ் கண் மருத்துவமனை அவிநாசி சாலையில் உள்ள கிளையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ரோட்டரி கவர்னர் ரோட்டேரியன் எம்.டி.எஸ் ராஜசேகர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சங்கீதா சுந்தரமூர்த்தி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர். கே.எஸ்.ராமலிங்கம், மருத்துவ இயக்குனர் டாக்டர். ஆர்.ஜெ. மதுசூதன் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் டாக்டர். என். செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு சலுகையாக உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனையில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்க்கு இலவச கண் பரிசோதனை செய்யப்படும். இந்த சலுகையை பெற முன்பதிவு அவசியம். தொடர்பு கொள்ளவும்: 74485 14851, 0422 4229970. முன்பதிவு செய்தவர்கள் இந்த சலுகையை நவம்பர் 14-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க