• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ 15 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்

December 10, 2016 தண்டோரா குழு

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவு மண்டபத்தின் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் எழுப்ப தமிழக அரசு ரூ. 15 கோடி நிதி ஒதிக்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

எம்ஜிஆர் நினைவு மண்டபம் அமைந்துள்ள எட்டு ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

“அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்ப அவரை அடக்கம் செய்த இடத்தைச் சுற்றி அளவு எடுக்கப்பட்டு, அதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் தரப்பட்ட பின்னர், அந்தப் பணி வேகமாக செய்து முடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

அம்மாவின் நினைவு மண்டபத்திற்கான வடிவமைப்பும் அதற்கான அதிகாரபூர்வமான அறிக்கையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் உள்ள சிறிய பழுதுகளைச் சரி செய்து வருகிறோம். தற்காலிக கூடாரங்கள் மற்றும் தடுப்பரண்களை எழுப்பியுள்ளோம். அந்தப் பணியின் திட்டம் முதல்கட்ட நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க