• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

October 11, 2021 தண்டோரா குழு

கோவை சாயிபாபா காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈட்பட்டனர்.

அப்போது தடாகம் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரகாஷ்(27) என்பதும், கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றதும் தெரிந்தது.

இதனையடுத்து சாயிபாபா காலனி போலீசார் சூரியபிரகாசை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், மற்றும் ரூ 200 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு ஜீவா நகர் ஜங்சனில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலாண்டிபாளையம் திலகர் தெருவை சேர்ந்த ஷியாம் ராகுல்(21) என்பவரை சாயிபாபா காலனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க