• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது !

October 11, 2021 தண்டோரா குழு

கோவையில் 13 வயது சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் கட்டிட தொழிலாளி இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒரே வீட்டில் 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணின் 13 வயது சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு கடத்தி வந்த வெற்றிவேல் திருமணம் செய்துகொண்டு அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த வெற்றிவேல் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மனவேதனை அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது இதையடுத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் சம்பவம் தொடர்பாக காக்கா சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரித்தபோது அவருக்கு 13 வயது என்பது தெரியவந்தது மேலும் வேலூரில் இருந்து அவரது தாய்க்கு தெரியாமல் கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே சிறுமி மாயமானதாக வேலூரில் அவரது தாயார் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து திருமணம் செய்ததோடு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த வெற்றிவேலை போலீசார் குழந்தை திருமணம் கடத்தல் கொலை மிரட்டல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வெற்றிவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க