October 11, 2021
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருபவர் செந்தில்குமார்.இவர் கடை அருகே குடியிருந்து வரும் ஆகாஷ் என்பவர் மது போதையில் வந்து பத்து ரூபாய் சிகரெட் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் போனதால் செந்தில்குமார் அவரை சத்தம் போட்டு காசு கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார் இதில் கோபம் அடைந்த ஆகாஷ் 10 நிமிடம் கழித்து மது பாட்டிலை உடைத்து செந்தில்குமாரை தாக்கியுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.காயமடைந்த செந்தில் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆகாஷ்க்கும் காயம் உள்ளதால் அவரரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பத்து ரூபாய் சிகரெட்டிற்கு பத்து ரூபாய் சிகரெட்டிற்க்காக மதுபோதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.