• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு – வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது

October 11, 2021 தண்டோரா குழு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உயர்ந்ததையடுத்து, வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது என குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகள், 28 கிராம பஞ்சாயத்துகள், 7 நகரப் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது.கடந்த செப்டம்பர் மாதத்தின் இடையில் அணையின் நீர்மட்டம் 40 அடியாக இருந்தது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கோவையில் குறைவாக பதிவான நிலையில்,வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு,பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.‘சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உயர்ந்துள்ளதாகவும், மாநகராட்சிக்காக 96 எம்.எல்.டி. நீர் குடிநீருக்காக எடுக்கப்படுவதாக’ கூறும் மாநகராட்சி அதிகாரிகள், அடுத்த வருடம் மார்ச் வரை எந்த பிரச்சினை இருக்காது என்றனர்.

மேலும் படிக்க