• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருட்ச்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் நினைவேந்தல் – ஆனந்த ஜோதி வாரம் நிகழ்வுகள்

October 8, 2021 தண்டோரா குழு

குமரகுரு கல்லூரியின் நிறுவனர் அருட்ச்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 9 வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் பொருண்மையில் ஆக்கப்பூர்வமான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஐயா அவர்கள் வள்ளலாரின் கோட்பாடுகளை பின்பற்றி வாழ்ந்தார்,அவருடைய நினைவு நாளான அக்டோபர் 2 அன்று குமரகுரு வளாகத்தில் உள்ள ஞான சபையில் ‘அகவல் பாராயணம்’ ஓதப்பட்டது.

முக்கிய நிகழ்வுகளாக -குமரகுரு கல்லூரியில் வளர்ந்து வரும் மாணவ எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட நம்பிக்கை பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு – ” ஹோப் “, குமரகுருவின் ” நமது பங்கு ” அமைப்பின் மூலம் சமூக நலன் கருதி 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன -” PENCIL”, குழ்நதைகளில் சிறந்த தலைமைத்துவம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்தை வளர்ப்பதற்கான ஒரு தொழில்முறை கல்வித் திட்டம், மற்றும் “KLEAP” குமரகுரு கற்றல் மேம்பாடு மற்றும் உதவி திட்டம்.

குமரகுரு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் படைப்புகளுக்கான கண்காட்சி “Project Launch “, IEDS இன் இணை இயக்குநர் மற்றும் தலைவர் M. பழனிவேல் அவர்களால் துவங்கிவைக்கப்பட்டது. .இக்கண்காட்சியில் புறஊதா கதிர் கிருமிநாசினி ரோபோ , உள்ளநாட்டுப் தயாரிப்பான மின்சார வாகனங்கள் , விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவி என பல படைப்புகள் ஆர்வமுள்ள மாணவர்களின் தொழில்நுட்ப திறனைப் பிரதிபலிக்கின்றன.

“Emerald” நிறுவனத்துடன் இணைந்து “RiGathon ‘21” – சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான போட்டி மெய்நிகர் வழி நடைபெற்றது இதில் 75 குழுக்கள் பங்கேற்றனர்.

குமாரகுருவின் “KARE” அமைப்பின் மூலம், பொள்ளாச்சி ஆனமலை புலிகள் காப்பகத்தில் குடியேறிய பழங்குடியினருக்கு அத்யாவசிய மளிகைக் பொருட்கள் 09 அக்டோபர் அன்று வழங்கப்பட்டது, தமிழ்நாடு வன துரையின் – TNFA உடன் இனைந்து பாரம்பரிய கட்டிடங்களை ஆவணப்படுத்தவும் மற்றும் அவற்றை பாதுகாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றது, குமரகுரு மாணவர் கழகங்கள் மற்றும் மன்றங்கள் இணைந்துவேறு மெய்நிகர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.

மேலும் படிக்க