• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்ஜினியர் வீட்டில் 63 பவுன் நகை, பணம் கொள்ளை

October 8, 2021 தண்டோரா குழு

கோவையில் இன்ஜினியர் வீட்டில் 63 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது.

கோவை விளாங்குறிச்சி ரோடு சிவராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(44). சிங்கப்பூரில் இன்ஜினியராக பணியாற்றினார். கடந்த ஆண்டு கோவை வந்தார். கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சுரேஷ் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்ற போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே பீரோவில் வைத்திருந்த 63 பவுன் தங்க நகை மற்றும் ரூ.91 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க