கோயம்புத்தூர் ஸ்தனக்வாசி ஜெயின் சங்கத்தின் சார்பில் கோவை நேரு வித்யாலயா பள்ளியில் ஜெயின் சாதுக்கள் பங்கேற்ற ஒருநாள் தியான விழா நிகழ்ச்சி நடந்தது.
இதில் சாதுக்கள் ஸ்ரீ குமதலாட்ஜி மகாராசா, ஸ்ரீ மஹாப்ரஞ்ஜி,ஸ்ரீ படம்கிர்டிஜி, ராஜ்கிரடிஜி மகாராசா ஆகியோர் பங்கேற்றனர்.கொரோனா முழுமையாக நீங்கவும்,மனிதநேயம் வளர்ச்சியடையவும், உடல் நலன் மேம்படவும், உறவுகள் மேம்படவும்,அமைதிக்காகவும் 10008 முறை மந்திரம் உச்சரிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்றது.
தியான நிகழ்ச்சிக்குப் பிறகு சாதுக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாவங்கள் அதிகமானதாலும், இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும், விலங்கினங்களை துன்புறுத்துவதாலும், பல்வேறு எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கின்றன.எனவே மக்கள் அனைத்து உயிர்களையும்,இயற்கையையும் நேசிக்க வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நலச்சங்க தலைவர் ரமேஷ் பாப்னா சி,ஜெயின் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.நிகழ்ச்சியில் ஸ்ரீ கோயம்புத்தூர் ஸ்தனக்வாசி ஜெயின் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பால் சந்த் கங்காரியா, செயலாளர் தன்ராஜ் சோர்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு