• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

October 4, 2021 தண்டோரா குழு

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நேரடியாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்ட நிலையில் பொது மக்கள் மனுக்களை பெட்டியில் தான் இட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நடைமுறை துவங்கியது.

இதனால் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று கொண்டார். இனி வரும் நாட்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இந்த நேரடி குறைதீர் முகாம் நடைபெறும்.நீண்ட நாட்களுக்கு பின் நேரடி மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரடியாக மனு அளிப்பது நம்பிக்கை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க