• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழி கருத்தரங்கு நடத்தி உலக சாதனை

October 4, 2021 தண்டோரா குழு

காந்தியமும் இன்றைய சமுதாயமும் எனும் தலைப்பில் தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழி கருத்தரங்கு நடத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கொரோனா கால பேரிடர் காலத்தில் கல்வி,வர்த்தகம்,தினசரி பணிகள், வங்கி பரிவர்த்தனை,கருத்தரங்குகள் போன்ற சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் இணையவழியாக நடந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இணையவழியாக தொடர்ந்து 14 மணி நேரம் கருத்தரங்கு நடத்தி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை, அகிம்சை தின விழாவாக கொண்டாடும் விதமாக காந்தியமும் இன்றைய சமுதாயமும் எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கின் துவக்க விழா இணையவழியாக நடைபெற்றது.அன்னை தெரசா மகளிர் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் வைதேகி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்,நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறை தலைவர் முனைவர் பிந்து மற்றும் பதிவாளர் ஹில்டாதேவி,ஆகியோர் வரவேற்புரை மற்றும் துவக்க உரையாற்றினா்.

சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் வி.தாமோர் கலந்து கொண்டு நாட்டு நல பணி திட்டம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் ஐ.ஐ.சி.சி.ஐ.குளோபல் பிரசிடென்ட் முகம்மது சிராஜ் அன்சாரி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து பதினான்கு மணி நேரம் இணையவழியாக சுமார் ஐநூறு பேர் கலந்து கொண்ட கருத்தரங்கில் பெண்கள் மேம்பாடு,புற்றுநோய் விழிப்புணர்வு,மன ஆரோக்கியம் மற்றும் அதன் முக்கியத்துவம்
நுகர்வோர் பாதுகாப்பு,குடும்ப வன்முறை வரதட்சணை கொடுமை, மனித உரிமை, இயற்கை விவசாயம்,என சமுதாய மேம்பாடு சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

காலை எட்டு மணி துவங்கி இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடைபெற்ற இணையவழி கருத்தரங்கை நோபள் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் நோபள் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார்.

மேலும் படிக்க