• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் – ஆட்சியர் சமீரன் துவக்கி வைப்பு !

October 4, 2021 தண்டோரா குழு

கோவையில் கள்ளச் சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

இதில் நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடியும்,மரக்கால் ஆட்டம் ஆடியும் மதுபானத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க