• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் திருட முயன்றதாக வடமாநில இளைஞருக்கு தர்ம அடி !

October 3, 2021 தண்டோரா குழு

கோவையில் கார் திருட முயன்ற வடமாநில கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து தர்ம அடிகொடுத்து போலிசில் ஒப்படைத்தனர்.

கோவை முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவர் சிட்கோவில் இயங்கிவரும் சிறு,குறு தொழில்முனைவோர் சங்க தலைவராக இருந்து வருகிறார்.இவர் இன்று காலை கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பேக்கரிக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையன். தனது கையில் இருந்த இரும்பு கம்பியை பயன்படுத்தி லாவகமாக காரின் கதவை திறந்து திருட முயன்றுள்ளான்.இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு காரை திருட முயன்ற திருடனை மடக்கிபிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடிகொடுத்து போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல் நிலைய போலிசார் கார் கொள்ளையனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரனையில் கார்திருட முயன்றவன் வடமாநில கொள்ளையன் எனதெரியவந்துள்ளது.

மேலும் படிக்க