• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராமசபைக் கூட்டம்; பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சிகளில் ஆட்சியர் பங்கேற்பு

October 2, 2021

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சி ராயர் ஊத்துபதி கிராமத்தில் நேற்று காந்திஜெயந்தி தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் ஊராட்சி தலைவர் சத்யபிரியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொண்டார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

கிராமசபைக் கூட்டங்கள் கிராமங்கள் தோறும் நடத்தப்படுவதன் நோக்கம் பொதுமக்கள் அவர்கள் சார்ந்த ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இக்கூட்டத்தில்

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நர்மதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க