• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே கடத்தப்பட்ட 5 மாத குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார் !

October 1, 2021 தண்டோரா குழு

கோவை அருகே பணத்திற்காக கடத்தப்பட்ட 5 மாத குழந்தை 24 மணி நேரத்திற்குள் மீடகப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை கடத்தல் தொடர்பாக
மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி,காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்னம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பணத்திற்காக கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் சங்கீதா என்பவரின் 5 மாத குழந்தை கடந்த 28 ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பகுதியில் சிசிடி வி காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போது அங்கலக்குறிச்சி கிராமத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் ராமர்,முருகேசன்,ஆகியோர் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்
முத்துப்பாண்டி என்பவருக்காக 90 ஆயிரம் பணத்திற்கு குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து குழந்தை முத்துப் பாண்டியிடம் இருந்து மீட்கப்படு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கோவைமாவட்டத்தில் 15 இடங்களில் வெளி மாநில மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகள் வைத்து பிச்சை எடுப்பவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்.

மேலும் படிக்க