September 30, 2021
தண்டோரா குழு
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக 27 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் பணியாற்றி வந்தார். வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.
இவரின் பணி ஓய்வு நிறைவு விழா பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப்பதிவாளர் இயக்குநர் பத்மினி தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு ஒன்றியத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துணைப்பதிவாளர் கிருஷ்ணன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை நிர்வாக அலுவலர் பிராங்கிளின் தாமஸ் ஆகியோர் பாலசுப்பிரமணியத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.