• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

September 30, 2021 தண்டோரா குழு

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியும், கோவை விமான நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் எனவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை கோவையில் நிறுவ வலியுறுத்தியும்,தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம்,மூவேந்தர் மக்கள் பொது நலச்சங்கம் உள்ளிட்டோர் மத்திய மாநில அரசை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கத்தின் மாநில தலைவர் கண்ணன்,பொருளாளர் முரளிக்குமார்,மூவேந்தர் மக்கள் பொதுநல சங்க தலைவர் எழில் பாண்டியன்,நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்கம் மாநில தலைவர் ஜெயக்குமார்,செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க