கோவை உக்கடம் பெரிய குளத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் செந்நாய் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
காட்டில் இருந்து வழிதவறி வந்த செந்நாயை வனத்துறையினர் மீண்டும் வனத்திற்கு விரட்டி அடித்தனர். இந்நிலையில், இன்று காலை பேரூர் சாலையில் உள்ள கெம்பட்டி காலனியில் செந்நாய் வந்து 3 நபரை கடித்து காயப்படுத்தியதாக தகவல்கள் பரவியது.
இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கடித்தது, நாட்டு நாய் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் உறுதி செய்தார்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நாட்டு நாயை பிடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு