• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கேஜி மருத்துவமனையில் இருதய செயலிழப்பு கிளினிக் துவக்கம் !

September 27, 2021 தண்டோரா குழு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை கே.ஜி.மருத்துவமனையில் இன்று இருதய செயலிழப்பு கிளினிக் தொடங்கப்பட்டது.

இம்மையத்தை பிரபல இருதய மாற்று அறுவை சிகிக்சை நிபுணர் டாக்டர் கே.ஆர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்த கிளினிக் தினமும் மாலை 4 மண முதல் 6 மண வரை கே.ஜி.மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சைப்பிரிவில் செயல்படும்.

இந்நிகழ்ச்சியில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் வரவேற்று பேசினார். பின்னர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சையின் உலக இதய நாயகன் விருதினை வழங்கி கௌரவித்தார்.

பின்னர் பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன் இருதய நலன் பற்றி விளக்கினார்.நிகழ்ச்சியின் நிறைவாக கே.ஜி.மருத்துவமனை CEO , அவந்திகா நன்றி உரை நிகழ்தினார்.
மேலும்,இந்நிகழ்ச்சியில் கே.ஜி.மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர், ராவ் , நித்தியன் பாலசுப்பிரமணயம், அருண்குமார், கிருஷ்ணன், சரவணன், முத்தையா சுப்பிரமணியம், சேகு கில்பட், விஜயகுமார், ஓம்பிரகாஷ் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சிறப்பு இருதய சிகிச்சை முகாம் அக்டோபர் 10 வரை நடைபெறுகிறது.இம்முகாமில் பங்கு பெற முன்பதிவு செய்ய வேண்டும்.இருதய பரிசோதனை சிறப்பு சலுகையாக ரூ .1,119 128 ஸ்லைஸ் இருதய சிடி ஸ்கேன் 6,999 கரோனரி ஆஞ்சியோகிராம் ரூ .7,999 சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்யப்படும்.

மேலும் படிக்க