• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகத்தில் ரூ.36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின

December 9, 2016 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்தில் கணக்கில் வராத பழைய ரூபாய் நோட்டுகளைப் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கல்புர்கியில் சூரஜ் சிங் (3௦) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தைப் பரிமாற்றம் செய்ய 25 லட்சம் ரூபாயைக் கொண்டு சென்றதாகத் தகவல் கிடைத்தது. அதையறிந்த போலீசார் அவரை அந்த இடத்திலேயே வியாழக்கிழமை (டிசம்பர் 8) கைது செய்தனர்.

மேலும் பழைய ரூபாய் நோடுக்களை கமிஷன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு அதைப் புதிய நோட்டுகளாக மாற்றி தரும் மோசடி நடப்பதாக சித்ராதுர்கா காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே தருண் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை நடத்தியதில் 11 லட்சம் மதிப்புள்ள புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தருண் மற்றும் ராஜு என்பவர் கைது செய்யப்பட்டார்.

கல்புர்கியில் 25 லட்சம் ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகவும், சித்ராதுர்கா பகுதியில் 11 லட்சம் ரூபாய் என மொத்தம் 36 லட்சம் ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகவும் சோதனையின் போது சிக்கின. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பயணம் செய்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுயுள்ளது. பணம் எங்கிருந்து வந்தது அதே நேரத்தில் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக பரிமாற்றம் செய்ய ஆர்வம் காட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 15% கமிஷனுக்காகப் பணப் பரிமாற்றம் செய்துள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க