• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூழ்நிலைகளை காரணம் காட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது – கோவை எஸ்.பி பேச்சு !

September 26, 2021 தண்டோரா குழு

சூழ்நிலைகளை காரணம் காட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என கோவை மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் கூறியுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி முன்னிலையிலும் இன்று மாலை 4.30 மணிக்கு காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 18 முதல் 21 வயது வரை உள்ள இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்கானமுகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில் சுமார் 100 இளஞ்சிறார்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது,

சூழ்நிலைகளை காரணம் காட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும் எனவும், ஒருமுறை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விட்டோம் என்பதை காரணமாகக் கொண்டு மறுமுறையும் அதனை தொடரக்கூடாது எனவும் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறி வாழ்வில் முன்னேற வேண்டும் மற்றும் நாம் முன்னேறுவதால் கிடைக்கும் பலன் பற்றியும் எடுத்துக்கூறி அவர்களின் வாழ்விற்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுரை வழங்கினார்.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் கல்வித்தகுதி மற்றும் அவர்களின் தேவைகள் காவல்துறையினரால் கேட்டு அறியப்பட்டது. மேலும் இளஞ்சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையோ, வேலைவாய்ப்போ, அவர்களின் குடும்பத்திற்கு உதவும் எண்ணம் உடையவர்கள் உதவலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க