தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மாநகர பகுதிகள் மற்றும் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் விடிய, விடிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் 569 ரவுடிகள் சிக்கினர். அதில் 165 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்