• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் நியமனம்

September 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையத்தால் மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மதிவாணன் தலைமையில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் தொடர்பான அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடிகள் அமைப்பது, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது, தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சமீரன், மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. அப்பகுதியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்க்கொண்டார்.

மேலும் படிக்க