• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

September 23, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடை சட்டம் 2013 ஆண்டு நடை முறைபடுத்தப்பட்டது. இச்சட்டத்தில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அனைத்து அரசுதுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக் குழுவின் தலைவராக ஒரு பெண் அலுவலரை நியமிக்க வேண்டும். இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும், இத்துறையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக்கான வழிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு அரசுதுறைகள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு தொழிற்சாலைகள், அரசு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், விற்பனைக்கடைகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இதர விற்பனைக்கடைகள் மற்றும் 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் தலைமை அலுவலகங்களில் கட்டாயம் உள்புகார்குழு அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து தலைமை அலுவலகங்களிலும் உடனடியாக புகார் குழு அமைத்து அதன் விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க