September 22, 2021
தண்டோரா குழு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் காட்வின் என்கிற ஜெபமணி (வயது 39). இவர் மதுக்கரையில் தங்கியிருந்து கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்படுகிறது. இதில் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்.
இதனிடையே அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் சிறுமியை அழைத்து சென்று காண்பித்துள்ளனர்.பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் கார் டிரைவர் காட்வினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.