September 21, 2021
தண்டோரா குழு
தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட இணை இயக்குனர் சித்ரா தேவி தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த முறையில் பயிர் உற்பத்திக்கு நுண் உயிர் உரங்கள் பயன்படுகிறது. மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழலையும் இந்த உரங்கள் பாதுகாக்கிறது. நுண் உயிர்கள் பயன்படுத்துவதால் 30 சதவீதம் தழைச்சத்தும், 20 சதவீதம் மணிச்சத்தும் கிடைக்கும்.
மேலும் பயிர்களின் மகசூல் 20 சதவீதம் அதிகரிக்கும். ‘அசோஸ்பைரில்லம்’ என்னும் மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி நெல், சோளம், கம்பு, வாழை, காய்கறி பயிர்களின் மகசூலை 25 சதவீதம் அதிகரிக்கிறது. அதே போல் ‘பாஸ்போபாக்டீரியா’ நுண்ணுயிரி தாவரங்களின் திசுக்கள் மற்றும் வேர்கள் செழித்து வளர உதவுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நுண் உயிர் உரங்கள் 50 சதவிதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகலாம் .
இவ்வாறு சித்ரா தேவி தெரிவித்துள்ளார்.