• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எஸ்.எம்.இ., கையில் எடுத்தால் தான் பொருளாதாரம் மேம்படும் – தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

September 21, 2021 தண்டோரா குழு

எம்.எஸ்.எம்.இ., கையில் எடுத்தால் தான் பொருளாதாரம் மேம்படும் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம்.இ.,துறையை மீட்டெடுப்பதே தற்போது தமிழக அரசின் பிரதானமாக உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் தொழில்துறை மேம்பாட்டு கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டங்களுக்கான கூட்டம் கோவையில் முதலில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய் அமைச்சர் தங்கம் தென்னரசு,

கொரோனா பெரு தொற்றால் நாடு எப்போதும் இல்லாத வகையில் சவால்களை சந்தித்து வருவதாகவும், புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியவர், காலம் காலமாக பாரம்பரிய தொழிலில் உள்ளவர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் தொழில்துறை முன் உள்ளதாகவும், தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் தான் வருவதாகவும், தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த் பலனடையும் என்றார்.

தினமும் முதல்வர் 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என கேட்பதாகவும், தடுப்பூசி செலுத்துவதில் கோவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டவர், நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளதாகவும், அதன் அடிப்படையில் வரலாற்று பாரம்பரியத்தில் குறைவில்லாத கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க