• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவைகள் பாதிப்பு

December 8, 2016 தண்டோரா குழு

கடும் பனிமூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புது தில்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் தொடர்ந்து நிலவி வருகிறது. சாலைகளில் தொலைவில் வரும் வாகனங்கள் சரியாக தெரியாதால் வாகன ஓட்டுனர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

கடும் பனி மூட்டம் வியாழக்கிழமை(டிசம்பர் 8) காணப்பட்டதால் 94 ரயில்கள் தாமதமாக புறப்பட்டது. 16 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது ஒரு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அங்கிருந்து ஆறு சர்வதேச மற்றும் ஏழு உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், 1 உள்நாட்டு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்திரப் பிரதேசம், லக்னோவில் குளிர் அலைகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் நகரில் இந்த பனியால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது மூன்று ரயில்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன மற்றும் 81 ரயில்கள் தில்லியில் இருந்து தாமதமாக இயங்கின.

டிசம்பர் 2ம் தேதி தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. நவம்பர் 30, 2016 குளிர் காலத்தின் முதல் மூடு பனியை வட இந்தியாவில் தொடங்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து உண்டாகும் கூடுதல் வெப்பமண்டல புயல் காரணாமாக இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதிகளில் திடீர் குளிர்கால மலையை கொண்டு வந்தது. அது மேற்கு இமாலய மலை பக்கம் திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மூடு பனியால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புது தில்லி விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானங்கள் ஜெய்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களின் வந்த இறங்க அந்த விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரச்னையை சமாளிக்க, விமான நடவடிக்கைகளை தொடர தயார் நிலையில் இருப்பதாக தில்லி சர்வதேச விமான லிமிடெட் (DIAL) அறிவித்துள்ளது. ஓடு பாதையில் உள்ள இடங்களை விமானிகள் துல்லியமாக பார்க்க உதவும் 18 ரன்வே விஷுவல் ரேஞ்ச் (RVR) சாதனங்களை அமைக்க விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் படிக்க