• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரும்புகடையில் விளையாட்டுப் பயிற்சி மைதானம் திறப்பு !

September 20, 2021 தண்டோரா குழு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் விளையாட்டுப் பிரிவான Track Force Sports Club (TFSC) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகளில் பங்கெடுக்கச் செய்துள்ளது. அதன் அடுத்த நிகழ்வாக விளையாட்டுப் பயிற்சி மைதானம் கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வை SIO கோவை மாவட்டத் தலைவர் முகமது ஆசிக் தலைமை தாங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், ரத்தினம் குழுமத்தின் தலைவர் Dr.மதன் எ செந்தில்,சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்ஸ் அலி,இந்தியா மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ் நாடு தலைவர் (SIO) சபீர் அஹமத்,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர் தலைவர் உமர் பாருக்,ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், SA vegetable உரிமையாளர் SA பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் TFSC தமிழக பொருப்பாளர் சுல்தான் நன்றியுரை கூறினார்.நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க