September 18, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை தமிழகத்தின் புதிய ஆளுநராக
ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜி.கே.வாசன், ஜி.கே.மணி, அண்ணாமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புதிய ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர்.