September 17, 2021
தண்டோரா குழு
பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று வருடங்களாக தனது பேக்கரியில் இலவச டீ,காபி வழங்கி வரும் பா.ஜ.க.தொண்டர்.
பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க வினர் மற்றும் பல்வேறு பிரிவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் செல்வம் பேக்கரி எனும் தேநீரகத்தை நடத்தி வரும் தாமரை சேகர் என்பவர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் கடைக்கு வருபவர்களுக்கு இலவசமாக டீ மற்றும் காபியை வழங்கி வருகிறார்.வ .ஜ.க.விவசாய அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள இவர்,கடந்த மூன்று ஆண்டுகளாக மோடியின் பிறந்த தினத்தில் இந்த சேவையை செய்து வருகிறார்.
காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை தொடர உள்ள இந்த சேவை துவக்க விழாவில்,மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் , மாநில விவசாய அணி செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் நந்தகுமார், மண்டல தலைவர் வெங்கடேஷ் ,மண்டல செயலாளர் சிவக்குமார் , மாவட்ட செயலாளர்கள் பூவை தங்கம் , மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.