• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிமுக சார்பில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை

September 15, 2021 தண்டோரா குழு

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சடமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

மேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சிதலைவி அம்மா திருவுருவ சிலைகளுக்கும் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில், அதிமுக கொடியேற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

மேலும் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்,தொண்டர்கள், உட்பட பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

மேலும் படிக்க