• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருகிய தோசையை மனைவி பரிமாறியதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

September 13, 2021 தண்டோரா குழு

கருகிய தோசையை மனைவி தனக்கு பரிமாறியதால் கோவையில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி (52). கட்டிட தொழிலாளி. இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று இரவு இவரது மாதவி, தோசை சுட்டு கணவருக்கு பரிமாறி உள்ளார். அதில் ஒரு தோசை கருகிய நிலையில் உள்ளது.

இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பழனி, அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு, தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர் ஏற்கனவே குடும்ப தகராறில் 4 முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பதும், 5வது முறை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க