September 13, 2021
தண்டோரா குழு
சத்தியமங்களம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) சிறந்த தூய்மை வளாக விருதை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தூய்மையை பராமரித்து வரும் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து தூய்மை வளாக விருதினை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2020-ம் ஆண்டு நடத்திய ஆய்வின் மூலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தூய்மையினை பராமரித்து வருவதற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதார் தூய்மை வளாக விருதினை கல்லூரிக்கு வழங்கினார். இவ்விருது புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தூய்மையான வளாகத்தினை பராமரித்து வருவதற்காக வழங்கப்பட்டது.
விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் சஹஸ்கர புத்தேஇ துணைத் தலைவர் பூனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.