September 11, 2021
தண்டோரா குழு
கோவை பட்டணம் சாலையில் உள்ள நெசவாளர் காலனியில் பகுதியில் அரசு மதுபான கடையின் இயங்கி வருகின்றது. இதன் அருகில் உள்ள மதுக்கூடத்தில் கூட்டமாக ஏராளமானோர் மது குடிப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் அங்கு சோதனைக்கு சென்றார். அங்கு
குடிபோதையில் இருந்த நபர்கள் மாநகராட்சி ஊழியர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தவே அவர் சக ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்ற மாநகராட்சி ஊழியர்கள், பாட்டிலை கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மீது வீசிய , குடிபோதையில் இருந்த நபர்களை பிடித்து சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியவர்கள் நெசவாளர் காலணியை சேர்ந்த சுரேஷ் , அசோக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.