• Download mobile app
20 Aug 2025, WednesdayEdition - 3479
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

290 கியூப்களில் பாரதியார் உருவம் வரைந்து 8 வயது குழந்தை அசத்தல்

September 11, 2021 தண்டோரா குழு

மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அடுத்து கோவை துடியலூர் அருகே 290 கியூப்களில் பாரதியார் உருவம் வரைந்து 8 வயது குழந்தை அசத்தியுள்ளார்.

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 8). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் 290 கியூப்களில் சுமார் 2மணி நேரம் பாரதியார் உருவம் வரைந்துள்ளார்.

இதுகுறித்து ஹன்சிதா கூறுகையில்,

“தமிழக முதல்வர் பாரதியார் நினைவு தினத்தை மகாகவி தினமாக அறிவித்தார்.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக 290 கியூப்களில் அவரின் உருவ படத்தை 2 மணி நேரத்தில் வரைந்துள்ளேன்,” என்றார்.

மேலும் படிக்க