• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தோனேசியாவில் பூகம்பம், 25 பேர் பலி

December 7, 2016 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் புதன்கிழமை (டிசம்பர் 7) கடலுக்கடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா அகே மாகாணத்தில் கடலுக்கடியில் புதன்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சிக்கி 25 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

அதிகாலை 5:03 மணியளவில் 6.4 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது வட அகே நகரில் உள்ள ரெயுலேன்ட் பகுதியில் 10 கிலோமீட்டர் (6 மைல்) தூரம் 17 கிலோமீட்டர் ஆழத்தில் (11 மைல்) அது மையம் கொண்டிருந்தது.

சுனாமியை ஏற்படுத்தும் அளவிற்கு சாத்தியம் இல்லை என்று அந்நாட்டின் வானிலை, வளிமண்டலவியல் மற்றும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை தெரிவித்துள்ளன.

அகே மாகணத்தில் உள்ள பேடி ஜெயா மாவட்டத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அங்கிருந்த 40 கட்டடங்கள் தரைமட்டமாயின. பூகம்பம் மையம் கொண்டிருந்த இடத்திலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்) தென்மேற்கு பகுதியில் அந்த மாவட்டம் உள்ளது.

பேடி ஜெயா மாவட்டத்தில் மேயுறேடு என்னும் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருந்த கடைகள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் புதையுண்டதாகத் தெரிகிறது. அவர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தலைமை அதிகாரி சுயத்னோ கூறினார்.

அம்மாவட்டத்தின் அருகில் உள்ள பைரேயுன் மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அக்கட்டடம் இடிந்து விழுந்ததில் இறந்துவிட்டார். 20 பேர் ஒரு சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடைந்த எலும்புகள் மற்றும் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று சுகாதாரப் பணியாளர், அகமத் தவுபிக் கூறினார்.

அருகிலுள்ள லோக்சீமவே நகரத்தில் வாசித்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பசிபிக் கடல் பகுதியில் அதிகமான பூகம்பம் மற்றும் எரிமலை ஏற்படும் இடம் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” என்று அழைக்கப்படும்.
உலகின் மிகப்பெரிய தீவுக் கூட்டமான இந்தோனேஷியா அந்த இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி இந்த இயற்கை அழிவு நேர்கிறது.

2004ம் ஆண்டு டிசம்பரில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு, இந்தியா உள்பட பல நாடுகளில் 230,000 பேர் இறந்தனர். இந்தோனேஷியாவில் மட்டும் 160,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயினர். அந்த மரணங்கள் அகே நகரில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க