• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

MDCRC -யின் 8 – ம் வருட டுசீன் விழிப்புணர்வு தினம்

September 8, 2021 தண்டோரா குழு

உலக டுசீன் விழிப்புணர்வு தினம் ஒவ்வவொரு வருடமும் செப்டம்பர் 7 -ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம்
தமிழ்நாட்டில் கோவையில் இயங்கி வரும் மரபணு பரிசோதனை ஆலோசனை ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் (MDCRC) 2014 – ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் போன்று இவ்வருடமும் இணையம் மூலமாக குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்கள், மருத்துவ குழு உறுப்பினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து
செப்டம்பர் 7 -ம் தேதி முதல் 9 -ம் தேதி
வரை மூன்று நாள் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.

செப்டம்பர் 7 – ம் தேதி காலை 9 மணிக்கு கடந்த வருடங்களின் முன்னோட்ட வீடியோவுடன் தொடங்கப்பட்ட இவ்விழா மாலை 7 மணிக்கு நீயா நானா புகழ் கோபிநாத்தின் சிறப்புரை மற்றும் அதைத்தொடர்ந்து டாக்டர்
லக்ஷ்மி, ஸ்ரீதேவி(மனநல நிபுணர்),
டாக்டர் நூருல் அமின் ஷாஹித் மற்றும் 400 பார்வையாளர்கள் வரை கலந்து கொண்டு கேள்வி பதில் கலந்துரையாடலுடன் முடிவு பெற்றது.

இவ்வருட டுசீன் தினத்தின் நோக்கம் “டுசீன் இளைஞர்களின் வாழ்வியல்”. செப்டம்பர் 8 -ம் தேதி காலம் காத்திரு காயம் பெறுத்திரு என்ற குறும்படம் MDCRC-யோவால் தயாரிக்கப்பட்டு
ஒளிபரப்பப்பட்டது. டுசீன் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தில் நிகழும் சில
உணர்வுகள் மிக அழகாக இப்படத்தில் எடுத்துரைபட்டது.

அதை தொடர்ந்து நோய் நோய் மதிப்பைத் தாண்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக தங்கள் வெற்றி பயணம் குறித்த சில இளைஞர்களின் பதிவும் மற்றும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தங்கள் கனவுகளையும் சந்தித்து கொண்டிருக்கும் தடைகளையும் சில இளைஞர்கள்
பகிர்ந்துள்ள வீடியோவும் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

செப்டம்பர் 9ம் தேதி டுசீன் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகள்,ஓவியங்கள், கையால் செய்யப்பட்ட மாதிரிகள் அவர்களின் திறமைகள் அதற்கு ஊக்குவிப்பவர்கள் பற்றிய வீடியோ பதிவுகள் மற்றும் அழகான புகைப்பட பதிவுகள் பதிவேற்றப்பட்டது.

தொடர்ந்து 8ம் வருட கொண்டாட்டம் இனிய நினைவுகளுடனும் குதூகலங்களுடனும் இனிதே நிறைவுபெற்றது.

மேலும் படிக்க