• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 688 டன் சரக்குகள் கையாண்டு சாதனை !

September 8, 2021 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 688 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக கோவை விமான நிலையத்திற்கு மிகக்குறைந்த அளவு பயணிகளே வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கோவைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனிடையே கடந்த மாதத்தில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு 98 ஆயிரத்து 817 பயணிகள் வந்து சென்று உள்ளனர்.

இது குறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:

கொரோனா அச்சம் காரணமாக கோவையில் இருந்து சார்ஜாவிற்கு மட்டுமே சர்வதேச விமானம் இயக்கப்படுகிறது.சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.இதன்படி கடந்த மாதம் மட்டும் சார்ஜாவிற்கு 24 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 291 பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
இது தவிர கோவையில் இருந்து பழங்கள், பூக்கள் என 101 டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் கடந்த மாதம் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு உள்ளூர் விமானங்கள் மொத்தம் 840 இயக்கப்பட்டு உள்ளது. இதில் 96 ஆயிரத்து 526 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.மேலும் 581 டன் சரக்குகளும் கையாளப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளுக்கு வெறும் 12 விமானங்கள் மட்டுமே கோவையில் இருந்து இயக்கப்பட்டது. இதில் 539 பேர் மட்டுமே பயணம் செய்தனர். உள்நாட்டில் இயக்கப்பட்ட விமானத்தில் 28 ஆயிரம் பேரும் பயணம் செய்தனர். கோவையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க