• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மீது வாகனங்கள் ஏறி உறுக்குலைந்து CCTV காட்சிகள்

September 7, 2021 தண்டோரா குழு

கோவை சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே அதிகாலையில் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மீது வாகனங்கள் ஏறி உறுக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் உடலை போலிசார் கைப்பற்றினர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை,போலிசார் விபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள சி.சி.டி.யை ஆய்வு செய்ததில் அதிகாலையில் சின்னியம் பாளையம் அருகில் கோவை நோக்கி வந்த ஒரு ஸ்கார்பியோ வாகனத்தில் இருந்து ஒருவரை வெளியே சாலையில் வீசும் காட்சி பதிவாகியிருந்தது.

போலிசார் அந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்து தற்பொழுது இரண்டு தனிபடைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வாகனத்தில் இருந்து வீசும்போது கொலைசெய்து வெளியே வீசினார்களா.அல்லது சாலையில் வேகமாக செல்கும்போது வெளியே தள்ளிவிட்டார்களா, இறந்தவர் யார், எதர்க்காக, யார் செய்தார்கள் என்று தனிபடை போலிசார் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர்.

முதற்கட்டமாக விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள கணியூர் சுங்கச்சாவடியில் அதிகாலை நேரத்தில் அந்தவழியாக சென்ற வாகனங்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கொலையாக இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த பெண்ணின் உடலில் மேலாடை மட்டும் ( ஜாக்கட் ) இருந்ததால் விபத்தில் இறக்க வாய்ப்பில்லை என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் படிக்க