• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக சாதனை செய்து அசத்திய மாணவி !

September 7, 2021 தண்டோரா குழு

கோவையில் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், ஐஸ் கட்டி மீது கால் முட்டிகளை வளைத்து நின்றபடி, ,தலையில் தீக்கரகம்,இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை செய்து மாணவி அசத்தியுள்ளார்.

கோவை செலக்கரசல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, மோனிஷா.வீராசாமி,ஜெயந்தி தம்பதியரின் மகளான,இவர்,கதிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார்.சிறு வயது முதலே நாட்டுப்புற கலைகளில் ஆர்வமுடைய மாணவி,மோனிஷா ,அதே பகுதியில் வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில், மாணவி மோனிஷாவின் உலக சாதனை நிகழ்ச்சி, வீரத்தமிழன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியின் ஆசான், டாக்டர் கனகராஜ்,மற்றும் ஐ.நா வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன்,மற்றும் கிராம மக்கள் முன்னிலையில்,நடைபெற்ற இதில்,மாணவி மோனிஷா,,ஐஸ் கட்டி மீது,தனது கால்களை முட்டி போட்டபடி, நின்று தலையில் தீக்கரகம்,கண்களில் கூர்மையான பிளேடுகளுடன்,தனது இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தை தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.

தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த,இவரது இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது… உலக சாதனை படைத்த சாதனை மாணவிக்கு வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவன தலைவரும்,கலை பண்பாட்டு பிரிவின் தீர்ப்பாளரும் ஆன டாக்டர் கனகராஜ்,மற்றும் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

சாதனை மாணவி மோனிஷாவிற்கு, செலக்கரச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கருப்புசாமி,முன்னால் தலைவர் சாமிநாதன் உட்பட அங்கு கூடியிருந்த ஊர் பொதுமக்கள் கைகளை தட்டி ஊக்கமளித்து,பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க