• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் மறியல் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு

September 7, 2021 தண்டோரா குழு

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இதுகுறித்து சு.பழனிசாமி. நிருபர்களிடம் கூறியதாவது:

தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே அங்கு போராடி விவசாயிகள் கூட்டமைப்பினர் வரும் 27ம் தேதி மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப வலியுறுத்தியம், 2020 புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் அன்றைய தினம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை ரயில் நிலையங்களில் விவசாயகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியோரிடமும் ஆதரவு கோர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெரியசாமி, வி.ஆர் பழனிசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க